News May 2, 2024
ஆவின் மோர் விற்பனை 30% அதிகரிப்பு

தமிழகத்தில் கோடை வெயில் கடந்த சில நாள்களாக மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், ஆவின் மோர் விற்பனை 30% அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் தினமும் 30,000 பாட்டில் மோர்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு 40,000ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பாக்கெட் மோர் விற்பனை கடந்தாண்டு 10,000ஆக இருந்த நிலையில், தற்போது தினமும் 18,000ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News February 4, 2026
சற்றுமுன்: தக்காளி விலை அதிரடியாக சரிந்தது

நான் இல்லாமல் சமையலா என்ற கேள்வியை தக்காளி எப்போதும் நம்மை பார்த்து கேட்கும். ஆனால், நீ இல்லாமலும் எங்களால் இருக்க முடியும் என அதன் விலை சமீபத்தில் நம்மை திகைக்க வைத்தது. 1 கிலோ தக்காளி ₹50 – ₹70 வரை சென்று அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில், விளைச்சல் அதிகரித்துள்ளதால், தக்காளி 1 கிலோ ₹10-க்கு விற்பனையாகிறது. இதனால் சமையல் செய்யும் வீட்டுக் கலைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News February 4, 2026
உங்க WhatsApp ஹேக் ஆகியிருக்கா? உடனே Check This!

உங்கள் WhatsApp ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை இந்த 5 அறிகுறிகளை வைத்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ➤திடீரென லாக் அவுட் ஆனால் ➤நீங்கள் அனுப்பாத மெசேஜ்கள் அனுப்பப்பட்டிருந்தால் ➤Linked Devices-ல் அறிமுகமில்லாத LogIn-கள் ➤புதிய குரூப்கள் மற்றும் Contact-கள் இடம்பெற்றிருந்தால் உங்கள் Whatsapp ஹேக் செய்யப்பட்டுள்ளது. உடனே <<17288605>>இதை<<>> செய்து சரி செய்யுங்கள். அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க, SHARE THIS.
News February 4, 2026
தங்கம் இலவசமாக கிடைக்கும்.. அரசின் குட் நியூஸ்

மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ், ₹25,000 பணமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதனை பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹75 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். திருமணமான பெண் பட்டப்படிப்பை முடித்திருந்தால் ₹50,000 வரை உதவித்தொகை கிடைக்கும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க. SHARE.


