News May 2, 2024
குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14 வரை விடுமுறை

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 14ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உயா்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சாா்பில், மே 15ஆம் தேதி வரை விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு, மே 14ஆம் தேதி வரை விடுமுறை எனவும், நீதிமன்ற அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் எனவும் உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 1, 2026
ராணிப்பேட்டை தாய்மார்களுக்கு ரூ.11,000! CLICK HERE

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே <
News February 1, 2026
மத்திய பட்ஜெட்: சரசரவென குறைந்தது

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இந்திய பங்குச்சந்தைகள் செயல்படுகின்றன. சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியுள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 83 புள்ளிகள் குறைந்து 25,335-க்கும், சென்செக்ஸ் 170 புள்ளிகள் குறைந்து 82,395-க்கு வர்த்தகமாகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
News February 1, 2026
பழைய ₹5 நோட்டுக்கு ₹10 லட்சம்! அடுத்த நூதன மோசடி

மோசடிகள் பலவிதம், அதில் இது புதுரகம். ‘பழைய ₹5 நோட்டு உள்ளதா? ₹10 லட்சம் கிடைக்கும்’ என ரீல்ஸ் ஒன்று வைரலாகியுள்ளது. அந்த நோட்டை வைத்திருந்த நெல்லை விவசாயி, ரீல்ஸில் இருந்த நம்பருக்கு போன் செய்துள்ளார். மறுமுனையில் இருந்தவர், ₹10 லட்சத்துக்கு, வரியாக ₹30 ஆயிரம் வேண்டும் என வங்கி அக்கவுண்ட் நம்பரை கொடுக்கிறார். ஆசையில், பணத்தை அனுப்பிய பிறகே, ஏமாந்ததை உணர்ந்த விவசாயி தற்போது தவித்து நிற்கிறார்.


