News December 29, 2025

மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

மதுரை மாநகரில் இன்று (28.12.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

Similar News

News January 10, 2026

மதுரையில் சோகம்…… MBA பட்டதாரி தற்கொலை

image

வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி சேர்ந்தவர் சதீஷ்(32). எம்பிஏ படித்த இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி காளீஸ்வரி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். சதீஷுக்கு நுரையீரல் கேன்சர் இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் தொடர்ந்து வலி இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டில் தூக்கிட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். மா.சத்திரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 10, 2026

மதுரை: சொந்த தொழில் துவங்க சூப்பர் வாய்ப்பு.!

image

மதுரை MSME தொழில்நுட்ப வளர்ச்சி நிலைய விரிவாக்க மையத்தில் ஒரு மாத கால தையல் பயிற்சி, அலைபேசி பழுதுநீக்க இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. 8வது தேர்ச்சி பெற்ற 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். போட்டோ, கல்விச்சான்றிதழ் நகலுடன் அணுக வேண்டிய முகவரி: MSME தொழில்நுட்ப வளர்ச்சி அலுவலக விரிவாக்க மையம், சிட்கோ தொழிற்பேட்டை 3வது நுழைவு வாயில், மாட்டுத்தாவணி, விவரங்களுக்கு 70100 41455 எண்ணில் அனுகலாம்.

News January 10, 2026

மதுரையில் இன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர் போல வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் 8th முதல் பட்டதாரி வரை, கல்விச் சான்றிதழ், சுயவிவரம், ஆதார் ஆட்டையுடன் வர மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!