News December 29, 2025
நெல்லை இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி தினமும் இரவு முதல் அதிகாரி வரை காவல்சரகம் வாரியாக காவல் அதிகாரிகள் சிறப்பு காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று டிசம்பர் 28 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நாளை காலை வரை சிறப்பு காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் பெயர் வரும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுபவர்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 11, 2026
நெல்லை: பாதயாத்திரை சென்ற இளைஞர் பரிதாப பலி

தென்மலைப்பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (25). இவர் அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு மானூர் அருகே மேல பிள்ளையார் குளம் சந்திப்பு பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த பைக் மோதி படுகாயம் அடைந்தார். நெல்லை G.H-ல் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீராம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மானூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 11, 2026
நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 11, 2026
நெல்லை பஸ் ஸ்டாண்டில் ஆண் சடலம் மீட்பு

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சி அம்பாசமுத்திரம் அகத்தியர் கோவில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பாசமுத்திரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


