News May 2, 2024
5 பேர் கைது: திடீர் திருப்பம்

நாட்றம்பள்ளி சமையனூரை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் நேற்று அஸ்வின், அபிஷேக், ரவி, ராகுல், ஆரிஷ் ஆகிய 5 பேரை நாட்றம்பள்ளி போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அஸ்வின் என்பவர் சரவணன் வீட்டின் அருகே உள்ள பெண்ணை காதலித்து வந்ததை சரவணன் பெண்ணின் தந்தையிடம் கூறியதால் ஆத்திரமடைந்து நண்பர்களுடன் சேர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வீசியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
Similar News
News August 14, 2025
திருப்பத்தூர்: அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்கள், நட்சத்திர ஹோட்டல்களில் கேளிக்கை விடுதிகளில் வருகின்ற (15.08.2025) அன்று ஒரு நாள் மட்டும் மதுபான விற்பனைக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் க. சிவசௌந்தரவல்லி அறிவித்தார். மேலும் விற்பனை செய்யப்படுவதாக வரும் புகார்கள் அடிப்படையில் விற்பனை செய்பவர் மீது கடுமை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News August 14, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 13) 10 மணி முதல் காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உட்கோட்ட அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணிகள் ஈடுபட்டும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
News August 13, 2025
திருப்பத்தூரில் பயிற்சி வகுப்பு அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற (23.08.2025) அன்று முதல் 30 வாரங்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி நியூ டவுன் நகராட்சி பள்ளி, ஆம்பூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் 0416 2256166 மூலம் தொடர்பு கொள்ளலாம்.