News May 2, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்

▶காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் பின்னால் அனைவரும் நிற்க வேண்டும்: வைகோ
▶தமிழகத்தின் மின் நுகர்வு புதிய உச்சம் தொட்டது
▶நாட்டில் 70 கோடி பேர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர்: பிரியங்கா காந்தி
▶இன்று 19 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும்: வானிலை ஆய்வு மையம்
▶தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை கொண்டுவர பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: மம்தா
▶IPL: சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி
Similar News
News February 4, 2026
BREAKING: மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!

மணிப்பூரில் ஓராண்டாக அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது. குக்கி – மெய்தி இனக்குழு இடையிலான வன்முறை காரணமாக CM பைரன் சிங் கடந்தாண்டு ராஜினாமா செய்த நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஓராண்டுக்கு பிறகு மணிப்பூரின் புதிய முதல்வராக <<19041801>>யும்னம் கேம்சந்த் சிங்<<>> பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News February 4, 2026
இலவச பட்டா கிடைக்காது.. அரசு முக்கிய அறிவிப்பு

TN அரசு ஏழை மக்களுக்கு இலவச பட்டா வழங்கி வந்தாலும், குறிப்பிட்ட இடங்களில் நீங்கள் வசித்தால் உங்களுக்கு பட்டா கிடைக்காது. குளம், குட்டை, ஏரி, கால்வாய் & சதுப்பு நிலங்கள் போன்ற நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்களுக்கு பட்டா கிடைக்காது. வனத்துறைக்கு சொந்தமான காடுகள், ரயில்வே நிலங்கள், ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள், கோயில் நிலங்களில் வசித்தாலும் பட்டா நிச்சயம் கிடைக்காது என அரசு தெரிவித்துள்ளது.
News February 4, 2026
நெல்லையில் நயினார் வென்று காட்டுவாரா? சேகர்பாபு

நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் மீண்டும் வென்று காட்டட்டும் என சேகர்பாபு சவால் விடுத்துள்ளார். மக்கள் அனைவரும் திமுகவுக்கு எதிராக உள்ளதாக நயினார் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, மக்கள் இயக்கமான திமுகவிற்கு 2026-ல் பெருமளவில் வெகுமதி அளிக்க மக்கள் தயாராக உள்ளதாகவும், ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் பதிலளித்தார்.


