News December 29, 2025

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா கலெக்டர் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள https//wwwahd.tn.gov.in.jallikattu என்ற இணையதள முகவரியின் Event Registration ல் இணைப்பில் கண்டுள்ள உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும். சரியான ஆவணங்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் மனு தள்ளுபடி செய்யப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி  தெரிவித்துள்ளார்

Similar News

News January 12, 2026

வேலூர்: இனி ஆதார் வாங்க, HI போடுங்க!

image

வேலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 12, 2026

பொங்கல் பண்டிகையால் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன. வேலூர்–நாகர்கோவில் ரூ.3,600, வேலூர்–நெல்லை ரூ.3,500 என வசூலிக்கப்படுகிறது. வழக்கத்தை விட அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசு உடனடி கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

News January 12, 2026

தொரப்பாடி சிறையில் 25 பேர் பரோல் கேட்டு விண்ணப்பம்

image

பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில் இருந்து 25-க்கும் மேற்பட்ட கைதிகள் தற்போது வரை பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பலர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது. கைதிகளின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு 4 அல்லது 6 நாட்கள் பரோல் வழங்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!