News December 29, 2025
அசாத்தியமான படைப்பாக வந்திருக்கும் ‘சிறை’: மாரி

‘சிறை’ படம் பார்த்து மனம் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். எந்த மாதிரியான கதைகளை, எந்த மாதிரியான மனிதர்களை, எந்த மாதிரியான அரசியலை, எந்த மாதிரியான பிரியத்தை சினிமாவாக மாற்றவேண்டும் என்று உணர்ந்த படைப்பாளிகளின் வருகை அடுத்த தலைமுறைக்கு பெரும் நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுக்கும். அப்படியொரு அசாத்தியமான படைப்பாக சிறை வந்திருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
Similar News
News January 2, 2026
வைகோ நடைபயணத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

திருச்சியில் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், 2026-ம் ஆண்டில் தான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது மிகவும் மகிழ்ச்சி என்றார். அரசியல் தலைவர்கள் மக்களிடம் சென்று தங்களது கருத்துகளை கூற, நடைபயணம் உதவும் என்றும், நடைபயணத்தின் நியாயம் குறித்து மக்கள் அப்போதுதான் பேசுவார்கள் எனவும் தெரிவித்தார்.
News January 2, 2026
ஏவுகணைகளான பீரங்கி குண்டுகள்: இந்தியா சாதனை!

இந்திய ராணுவம், சென்னை IIT உடன் இணைந்து உலகிலேயே முதல்முறையாக பீரங்கி குண்டுகளில் ராம்ஜெட் தொழில்நுட்பத்தை புகுத்தி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், பீரங்கி குண்டுகள் காற்றை பயன்படுத்தி, ஏவுகணையை போல செயல்பட்டு வானில் சீறிப்பாயும். அதாவது, சாதாரண குண்டுகள் 30 கிமீ தூரம் சென்றால், இவை 45-60 கிமீ வரை செல்லும். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இவற்றை, 155mm பீரங்கிகளிலேயே எளிதாக பயன்படுத்தலாம்.
News January 2, 2026
ஜனநாயகன் vs பராசக்தி: முந்துவது யார்?

ஜனநாயகன், பராசக்தி இரு படங்களில் எந்த படம் வெற்றிக் கொடியை நாட்டும் என்ற கேள்விதான் தற்போது ரசிகர்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது. சோஷியல் மீடியாவை பொறுத்தவரை தற்போது ஜனநாயகனே சற்று முந்தி இருக்கிறது எனலாம். விஜய் படத்திற்கு தமிழகத்தில் 500- 550 தியேட்டர்களும், SK படத்துக்கு 400- 450 வரை தியேட்டர்களும் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க இதில் எந்த படத்துக்கு வெயிட்டிங்?


