News May 2, 2024
மழையை சேமிக்கும் திறன் தமிழக அரசிடம் இல்லை

கடவுள் அதிக மழையை தருகிறார், ஆனால் அதை சேமிக்கும் திறன் தமிழக அரசிடம் இல்லையென பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கோடைக் காலத்தில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசிடம் தண்ணீர் கேட்பது என்பது ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது என்றும், தண்ணீர் வரும்போது வீணாக கடலில் கலக்க விடுவதும், பின்னர் தண்ணீர் இல்லை என்பதும் தொடர் கதையாக இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

TRAI தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ் செல்போனின் IMEI நம்பர், மோடம், சிம் கார்டு, ரேடியோ ஆகியவற்றில் அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாகும். இதனை மீறுவோருக்கு 3 ஆண்டு ஜெயில் (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) 2-ம் சேர்த்து விதிக்கப்படும் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரித்துள்ளது. இதனால், Second Hand-ல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வாங்குவோர் ஜாக்கிரதையாக இருங்கள்.
News February 2, 2026
வெற்றிக் கூட்டணி.. ராமதாஸ்

கூட்டணி கதவை திமுக அடைத்ததால், பாமக (ராமதாஸ்) வட மாவட்டங்களில் <<19030976>>தனித்து போட்டியிட<<>> திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தைலாபுரத்தில் பாமக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 3-வது நாளாக ராமதாஸ் நேர்காணல் செய்தார். அப்போது, நாம் அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும் என அறிவித்து, தனித்து போட்டி என்ற யூகங்களுக்கு ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
News February 2, 2026
நமது ஆயுள் மரபணுக்களின் கைகளில் உள்ளது

மனிதர்களின் ஆயுட்காலத்தில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. விபத்துகள் மற்றும் தொற்றுகளால் ஏற்படும் இறப்புகளைத் தவிர்த்துவிட்டால், ஆயுட்காலத்தைத் தீர்மானிப்பதில் மரபணுக்களின் தாக்கம் மிக அதிகம் (50%) என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, நமது குடும்ப மரபு மற்றும் மரபணு அமைப்பு, வாழ்நாளை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.


