News December 28, 2025

இந்தியாவில் கால் தடத்தை விரிவாக்கும் Rolls Royce!

image

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான Rolls Royce, வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களுக்காக, அதிநவீன இன்ஜின்களை தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் US, ஜெர்மனிக்கு பிறகு இந்தியாவை தங்களின் உள்நாட்டு சந்தையாக விரிவுபடுத்த விரும்புவதாகவும் கூறியுள்ளது.

Similar News

News January 2, 2026

தி.மலை: மனக்கஷ்டம் நீங்க இங்கு போங்க!

image

தி.மலை மாவட்டம் தேவிகாபுரம் பகுதியில் பிரசித்திபெற்ற கனககிரீசுவரர் கோயில் உள்ளது. மலை மீது உள்ள இந்த கோயிலில் ஒரே கருவறையில் 2 சிவ லிங்கங்கள் உள்ளது. வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, மனக்கஷ்டம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறினால், மொட்டை அடித்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை செய்கின்றனர். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 2, 2026

தவெகவில் இணைந்தார் அதிமுக Ex MLA ஜேசிடி பிரபாகர்

image

தீவிர ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த ஜேசிடி பிரபாகர், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். ஏற்கெனவே அவரது மகன் தவெகவில் இணைந்த நிலையில், தற்போது அவரும் அக்கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். அண்மையில், ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். இப்போது, ஜேசிடி பிரபாகரும் தவெக பக்கம் திரும்பி இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

News January 2, 2026

காயத்தால் தவிக்கும் TN நட்சத்திரம் சாய்சுதர்சன்

image

விஜய் ஹசாரே தொடரில் ம.பி., அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் சாய்சுதர்சன் காயமடைந்துள்ளார். ரன் எடுக்க ஓடியபோது கீழே விழுந்த அவருக்கு, விலா எலும்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இப்போது பெங்களூரு centre of excellence-ல் சிகிச்சையில் உள்ள சாய் சுதர்சன் வேகமாக குணமடைந்து வருகிறாராம். IPL தொடங்குவதற்கு முன் அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!