News December 28, 2025
தாம்பரம்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இயக்கம்

தாம்பரம்-ராமேஸ்வரம் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06017) நாளை (டிசம்பர் 29 ) இரவு 9.00 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். ராமேஸ்வரத்தில் இருந்து டிசம்பர் 30 இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06018) மறுநாள் காலை 9.00 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
Similar News
News January 13, 2026
ரயில்ஒன்: முன்பதிவில்லா டிக்கெட்டுக்கு 3% தள்ளுபடி

ரயில்ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் முன்பதிவு செய்யப்படும் முன்பதிவில்லா டிக்கெட்டுகளுக்கு 3% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை 2026 ஜன.14 முதல் ஜூலை 14 வரை அமலில் இருக்கும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோட்டத்தில் கூடுதல் கவுண்டர்கள், உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ரயில்ஒன் செயலி IRCTC Rail Connect, NTES, UTS on Mobile, RailMadad, Food on Track ஆகிய சேவைகளை ஒருங்கிணைக்கிறது.
News January 13, 2026
சென்னையில் இருந்து 2.72 லட்சம் பேர் பயணம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு ஆம்னி பேருந்துகள் மூலம் பெருமளவில் மக்கள் பயணம் செய்துள்ளனர். 09.01.2026 முதல் 13.01.2026 வரை மொத்தம் 6,820 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,72,850 பயணிகள் சென்றுள்ளனர். குறிப்பாக 13.01.2026 அன்று மட்டும் 1,860 பேருந்துகளில் 74,400 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து கழகம் தகவல்.
News January 13, 2026
சென்னை: அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.


