News December 28, 2025
திமுகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் விளக்கம்

EPS தலைமையை ஏற்க மாட்டோம் என திட்டவட்டமாக டிடிவி தினகரன் தெரிவித்துவிட்டார். இதனால் அவர் திமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளதாக ஒருசில அரசியல் நோக்கர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் உங்கள் பார்வை திமுக பக்கம் திரும்புமா என டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்காத டிடிவி, பொறுத்திருந்து பாருங்கள் என புன்னகையுடன் பதில் அளித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. மகிழ்ச்சியான செய்தி

மகளிர் உரிமைத் தொகை ₹1,000 உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனிடையே, பொங்கலுக்கு முன்பாக மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியிருந்தார். இந்நிலையில், வழக்கமாக உரிமைத் தொகை வரவு வைக்கப்படும் நாள் அன்றோ (ஜன.15) (அ) நாளையோ தொகை உயர்வு பற்றிய அறிவிப்பை CM வெளியிடுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரெடியா?
News January 13, 2026
மோடி முன்னிலையில் ஜி.வி.பிரகாஷ் பாடல் ரிலீஸ்!

டெல்லியில் PM மோடி முன்னிலையில் திருவாசகத்தின் முதல் பாடலை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாளை இசைக்க உள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் ஜிவி பிரகாஷ் தனது இசை கச்சேரியில் இதனை நிகழ்த்த உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏழை தாயின் மகன் என்ற மோடியின் 75வது பிறந்தநாள் பாடலுக்கு அவர் இசையமைத்திருந்தது கவனிக்கத்தக்கது.
News January 13, 2026
பிரபல பாடகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

பிரபல பாடகர் சமர் ஹசாரிகா (75) உடல்நலக் குறைவால் காலமானார். அசாம் திரையுலகில் பின்னணி பாடகராக கொடி கட்டி பறந்த இவர், பாரத ரத்னா பெற்ற பூபன் ஹசாரிகாவின் சகோதரர் ஆவார். தமிழ் திரையுலகில் கோலோச்சிய SPB போல, அசாமில் புகழ்பெற்று இருந்துள்ளார். அம்மாநில கலாசாரத்தை போற்றும் வகையில் பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


