News December 28, 2025
BREAKING: இந்திய அணி 221 ரன்கள் குவிப்பு

இலங்கைக்கு எதிரான 4-வது டி20-ல் அதிரடியாக விளையாடிய இந்திய மகளிர் அணி ரன்களை 221 குவித்துள்ளது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதியும், ஷபாலியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இலங்கைக்கு நெருக்கடி கொடுத்தனர். ஸ்மிருதி 48 பந்துகளில் 80 ரன்களையும், ஷபாலி 46 பந்துகளில் 79 ரன்களையும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
Similar News
News December 30, 2025
பொங்கல் பரிசு பணம்.. மகிழ்ச்சி செய்தி வெளியானது

பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. வேட்டி, சேலைகளை ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணிகள் 85% நிறைவடைந்துள்ளன. கரும்பு கொள்முதல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் இன்று (அ) நாளை வெளியிடவிருப்பதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
News December 30, 2025
திமுக ஒரு இன்ஜின் இல்லாத கார்: EPS

இன்ஜின் இல்லாத திமுக என்ற காரை, 10 ஆண்டுகளாக கூட்டணி என்ற லாரி இழுத்து செல்வதாக EPS விமர்சித்துள்ளார். கும்மிடிப்பூண்டியில் இன்று பேசிய அவர், இப்போது ஆட்சியில் பங்கு கேட்டு, அதே கூட்டணி என்ற லாரி மக்கர் செய்கிறது என்றார். மேலும், 1999-ல் திமுக-பாஜக கூட்டணி அமைத்து வெற்றி பெற்றபோது, உங்களுக்கு பாஜக நல்ல கட்சி. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா என கேள்வி எழுப்பினார்.
News December 30, 2025
படிப்புக்கூட தற்காப்பு கலையும் கத்துக்கோங்க!

வாழ்வில் எப்போது ஆபத்து வரும் என்பது தெரியாது. டெல்லியை சேர்ந்த திவ்யாவின்(14) கதையை கேளுங்க. சாலையில் சென்ற போது, இச்சிறுமியின் தாயாரின் செயினை ஒருவர் பறித்துள்ளார். இதைக்கண்டு துளியும் அஞ்சாத இச்சிறுமி அத்திருடனை துரத்தி பிடித்துள்ளார். கடந்த 5 வருடமாக கராத்தே பயின்று வரும் இச்சிறுமியின் செயல் பலருக்கும் ஒரு பாடமே. படிப்பு மட்டும் போதாது, பெண்களுக்கு தற்காப்பு கலையும் முக்கியம்!


