News December 28, 2025

இது தான் நட்பு.. நண்பனின் நினைவு நாளில் நெகிழ்ச்சி!

image

’என் ப்ரெண்ட போல யாரு மச்சான்.. என் டிரெண்ட எல்லாம் மாற்றி வச்சான்’ என்ற பாடலின் வரியை உண்மையாக்கியுள்ளனர் மன்னார்குடி இளைஞர்கள். விக்னேஷ் என்பவர் கடந்த 2023-ல் விபத்தில் சிக்கி போதிய ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்தார். அவரது நினைவாக தங்களது நண்பன் போல் வேறு யாரும் ரத்தம் கிடைக்காமல் உயிரிழக்கக் கூடாது என 2-வது ஆண்டாக அவரது நண்பர்கள் ரத்த தானம் வழங்கியது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Similar News

News February 4, 2026

கல்கி-2-ல் 2 கெட்டப்பில் அசத்தும் கமல்

image

பிரபாஸின் ‘கல்கி -2’ படத்தில் கமலுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் சில காட்சிகளில் மட்டுமே தோன்றிய கமல், இரண்டாம் பாகத்தில் கிட்டதட்ட 90 நிமிடங்கள் வருவாராம். அதுமட்டுமல்லாமல், 2 கெட்டப்களில் கமல் இதில் நடிக்கிறார். மேலும் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.

News February 4, 2026

அஜித் பவார் மரணத்தில் சந்தேகத்தை கிளப்பிய MP

image

அஜித் பவாரின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என உத்தவ் சிவசேனாவின் MP அர்விந்த் சவாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவசரமாக விவாதிக்க வேண்டும் என லோக் சபாவில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸையும் அவர் கொடுத்துள்ளார். ஏற்கெனவே அஜித் பவாரின் மரணத்தில் சதி இருக்கலாம் என மம்தா பானர்ஜியும் சந்தேகம் தெரிவித்திருந்தார்.

News February 4, 2026

பலுசிஸ்தான் தாக்குதலால் விழிபிதுங்கி நிற்கும் பாக்.,

image

பலுசிஸ்தான் விடுதலைப்படையின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு இப்போது பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானின் 40% நிலப்பரப்பை கொண்ட பலுசிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டுவரமுடியாமல் அந்நாடு விழிபிதுங்கி நிற்கிறது. இதனிடையே பலுசிஸ்தானில் அதிகரித்து வரும் தாக்குதல்களைத் தடுப்பதில் ஊனமுற்றது போன்ற நிலையில் ராணுவம் இருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆசிப் ஒப்புக்கொண்டார்.

error: Content is protected !!