News December 28, 2025
குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

சுசீந்திரம் அருகே கொத்தன்குளத்தை சேர்ந்தவர் வெர்ஸ்லின் ஹரணி (23). இவர் நர்சிங் படித்துள்ளார். இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்தது. இந்த காரணத்தால் நேற்று (டிச.27) வெர்ஸ்லின் ஹரணி வீட்டு படுக்கை அறையில் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
குமரி: டூவீலர் விபத்தில் முதியவர் பலி

மூலச்சல் பகுதி சுதாமணி (55) தனது பேரன் அபின்ராஜூடன் (19) டிச.30.ம் தேதி இரவு அருகில் உள்ள திருமணவிழாவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது புறத்தால்விளையை சேர்ந்த தங்கராஜ் (72) ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. தங்கராஜ் தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த 3பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தங்கராஜ் இறந்து போனார். தக்கலைபோலீசார் விசாரணை நடத்தினர்
News January 1, 2026
குமரி: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

குமரி மாவட்ட மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <
News January 1, 2026
குமரி: மது என நினைத்து மருந்து குடித்தவர் பலி!

மேல கரும்பாறையைச் சேர்ந்தவர் செல்வின் குமார் (48). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இவர் போதையில் மது என நினைத்து களைக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்ததாக கூறப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்து போனார். இது தொடர்பாக கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


