News December 28, 2025
பொங்கல் பரிசாக ₹5,000 வழங்குக: EPS

பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு ₹5,000 வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், திருப்போரூர் அருகே பரப்புரை மேற்கொண்ட EPS, கடந்த பொங்கல் பண்டிகைக்கு அரசு ₹1 கூட வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார். வரும் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு ₹5,000 வழங்க வேண்டும் என தமிழக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார். EPS-ன் கருத்து பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News February 8, 2026
தங்கம், வெள்ளி விலை.. ஒரேயடியாக ₹40,000 குறைந்தது

கடந்த வாரத்தில் தங்கம், வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களுடன் பூச்சாண்டி காண்பித்தது. தங்கம் விலை சவரனுக்கு ₹11,400 வரை குறைந்த அதேநேரத்தில் ₹3,840 உயர்ந்தது. அதேபோல், வெள்ளி விலையும் 1 கிலோவுக்கு ₹40,000 வரை குறைந்த நிலையில், ₹5,000 உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, 1 சவரன் தங்கம் ₹1,15,360-க்கும், 1 கிலோ வெள்ளி ₹2.85 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
News February 8, 2026
காதலியுடன் சிக்கிய கணவன்..

காதலுக்கு இடையூறாக இருந்ததால் மனைவியை அடித்துக் கொன்ற கணவன் காதலியுடன் சிக்கியுள்ளார். திருவள்ளூர், அத்திவாக்கம் பகுதியைச் சேர்ந்த கவுசல்யா(20) திருமணமான 5 மாதங்களில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கவுசல்யாவின் அத்தை மகனும் கணவருமான ராஜேஷ்(30) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் தனது காதலி தீபிகா(21) உடன் சேர்ந்து கவுசல்யாவை ராஜேஷ் அடித்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. So Sad!
News February 8, 2026
தவெக கூட்டணியின் கொள்கை முடிவை கூறிய அருண்ராஜ்!

தவெகவுடன் கூட்டணியில் இணைவோருக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக அருண்ராஜ் திட்டவட்டமாக கூறியுள்ளார். கோவையில் பேசிய அவர், தீய சக்தி திமுகவை வீழ்த்துவதே தங்களது முதன்மையான இலக்கு; கொள்கை என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதேநேரம், தற்போது கூட்டணி தொடர்பாக யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கூறினார்.


