News December 28, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் முகாம்

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாம் தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிராபகரன் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News January 2, 2026
கோவையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம் ▶️கோவை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0422-2200009 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (ஷேர் பண்ணுங்க)
News January 2, 2026
மேட்டுப்பாளையத்தில் திடீர் ரத்து

நீலகிரியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ் – குன்னூர் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் மரங்கள், பாறை விழுந்து தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் இன்று ஒரு நாள் காலை 7:10 மணிக்கு புறப்படும் ரெகுலர் மலை ரயில் மற்றும் 9.10 மணியளவில் புறப்படும் சிறப்பு மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News January 2, 2026
சூலூர் அருகே பரபரப்பு! சாலையில் கிடந்த அம்மன் சிலை

சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் அயோத்தியாபுரம் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் அம்மன் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் அங்கே வைத்து வழிபட முடிவு செய்தனர். ஆனால் அங்கு வந்த வட்டாட்சியர் சிலையை பொதுமக்களிடமிருந்து எடுத்து சென்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைத்தனர். இது பற்றி சூலூர் போலீசார் விசாரணை செய்கின்றனர்


