News December 28, 2025

நாசாவையே திரும்பி பார்க்க வைத்த பள்ளி மாணவன்!

image

US-ல் மட்டேயோ பாஸ் எனும் பள்ளி மாணவன் அறிவியல் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளார். நாசாவின் Neowise டெலஸ்கோப் தரவுகளை பயன்படுத்தி, தானே உருவாக்கிய AI உதவியோடு, விண்வெளியில் 15 லட்ச பொருள்களை கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து, தயவுசெய்து நாசாவில் பணிக்கு விண்ணப்பிக்குமாறும், பணி ஒப்பந்த போனஸாக போர் விமானத்தில் ஒரு ரெய்டு அழைத்து செல்வதாகவும் நாசா இயக்குநர் ஜாரட் ஐசக்மேன் ஆஃபர் கொடுத்துள்ளார்.

Similar News

News January 15, 2026

பொங்கல் பண்டிகையும் சூரியனும்

image

சூரியனை வழிபடுவது ஐம்பூதங்களையும் வழிபடுவதற்கு சமம் என்று நன் முன்னோர்கள் கருதினர். சூரிய வழிபாட்டினால் தோல்நோய், கண் நோய்கள் குணமாகிவிடும் என்றும் நம்பினர். இதன் காரணமாக சூரியன் வடக்கு திசையை நோக்கி பயணிக்க தொடங்கும் தை முதல் நாளில் பொங்கல் வைத்து படையல் செய்து வழிபட்டனர். இதன் தொடர்ச்சியாக சங்க காலம் தொடங்கி நாமும் பொங்கலை கொண்டாடி வருகிறோம்.

News January 15, 2026

0% மார்க் எடுத்தாலும் டாக்டருக்கு படிக்கலாம்!

image

NEET PG 3-ம் கட்ட கலந்தாய்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 800 மதிப்பெண்களுக்கு பொதுப்பிரிவு, EWS- 7% (103 மதிப்பெண்கள்), SC/ST/OBC – 0% (-40 மதிப்பெண்கள்) குறைக்கப்பட்டுள்ளது. நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்ளதால் -40 மதிப்பெண்கள் எடுத்தாலும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். நாடு முழுவதும் 18,000 முதுகலை மருத்துவ இடங்கள் வீணாவதை தடுக்கவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News January 15, 2026

புத்தர் பொன்மொழிகள்

image

*நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும். *நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன அல்லது செய்தவற்றின் விளைவாகும். *எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது. பிறகு ஏன் நிரந்தரமற்ற விசயங்களுக்காக கவலைப்பட வேண்டும். *நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், நமது செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.

error: Content is protected !!