News May 2, 2024

முதற்கட்ட தேர்தல் பாஜகவுக்கு எதிராக உள்ளது

image

பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இருப்பதாக கம்யூ., கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடி மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசுவது நாகரீகம் அல்ல என்றும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களிடையே மோதல்களை ஏற்படுத்தும் விதமாக பேசுவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்ட தேர்தல் பாஜகவுக்கு எதிராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 21, 2025

விஜய் முதலில் பரீட்சை எழுதட்டும்: RB உதயகுமார்

image

2026 தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி என்று மீண்டும் நேற்று அழுத்தமாக கூறினார் விஜய். இந்நிலையில், இதுகுறித்து பேசிய RB உதயகுமார், திமுகவுக்கு என்றுமே அதிமுக தான் மாற்று என கூறியுள்ளார். விஜய் தற்போது தான் படித்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், முதலில் பரீட்சை எழுதட்டும், பின்னர் அவர் பாஸ் ஆவாரா இல்லையா என்பதை பார்ப்போம் என்றும் விமர்சித்துள்ளார். 2026 தேர்தலில் உங்கள் கணிப்பு என்ன?

News September 21, 2025

நவராத்திரியில் தங்கம் வாங்குவதால்..

image

எவ்வளவு விலை கூடினாலும், தங்கம் வாங்க மக்கள் ஆர்வம் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். அதே நேரத்தில், தங்கத்தை வாங்குவதற்கு என சில விசேஷ தினங்கள் உள்ளன. அம்மனுக்கு உகந்த நவராத்திரியில் தங்கத்தை வாங்குவதோ, முதலீடு செய்வதோ வாழ்க்கையில் ஏற்றத்தை கொடுக்குமாம். 10-வது நாளான விஜயதசமியில் வாங்குவது கூடுதல் நன்மை கொடுக்கும் எனப்படுகிறது. நாளை நவராத்திரி தொடங்குகிறது. இத்தகவலை நண்பர்களுக்கும் பகிரவும்.

News September 21, 2025

இன்று இரவு கணவன் மனைவி சேரக் கூடாதாம்

image

சூரிய கிரகணம் இன்று இரவு 10.59 முதல் நாளை அதிகாலை 3.23 வரை நிகழவுள்ளது. கிரகணம் நிகழும் பொழுது, கணவன்- மனைவி இணைய கூடாது என்று சொல்லப்படுகிறது. அதேபோல், மற்றவர்களை விடவும் கர்ப்பிணிப் பெண்கள் கிரகண காலத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெளிவரும் அதிகப்படியான கதிர்வீச்சு வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமாம்.

error: Content is protected !!