News December 28, 2025

நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நீலகிரி மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 7, 2026

நீலகிரியில் சிறுத்தை பலி!

image

நீலகிரி மாவட்டம் குந்தா, உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், குந்தா மஞ்சக்கொம்பை பகுதியில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த சிறுத்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதன் பின்னர், சிறுத்தையின் உடல் அதே இடத்திலேயே எரியூட்டப்பட்டது.

News February 7, 2026

நீலகிரி:இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (6/2/26) இரவு முதல் நாளை காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம், ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News February 6, 2026

நீலகிரி: தீராத நோய் தீர இங்க போங்க!

image

நீலகிரி, கோத்தகிரி அருகே பிரசித்தி பெற்ற வெற்றிவேல் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக வெற்றிவேல் முருகன் இடது பாகத்தில் மயில் பீலியுடன் அபூர்வமாக வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் தீராத நோய், குடும்ப பிரச்சனை, நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. குடும்ப பிரச்சனையில் உள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!