News May 2, 2024

நீ இல்லையென்றால் நானில்லை

image

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 36ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அவருக்கு விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உன்னைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் நான் முற்றிலும் தொலைந்து போயிருப்பேன். பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பே. நமது உலகத்தின் வெளிச்சம் நீ. உன்னை மிகவும் நேசிக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Similar News

News March 26, 2026

வந்தே மாதரம் பாடுவது காட்டாயமல்ல: சுப்ரீம் கோர்ட்

image

அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயமில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிமுறைகளில், அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், அது ஒரு அறிவுறுத்தல் மட்டுமே, அதை பின்பற்றாதவர்களுக்கு எந்தவித தண்டனையும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

News March 26, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 26, பங்குனி 12 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: அஷ்டமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.

News March 26, 2026

கூகுள், மெட்டாவுக்கு கோடிகளில் அபராதம்

image

சமூக ஊடகப் பழக்கத்தால் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட வழக்கு தொடர்ந்த 20 வயது பெண்ணுக்கு ஆதரவாக லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தைகளை அடிமையாக்கும் நோக்கத்துடன் இன்ஸ்டா & யூடியூப் வேண்டுமென்றே வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மெட்டா – ₹17.5 கோடியும், கூகுள் – ₹8.4 கோடியும் அபராதமாக விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

error: Content is protected !!