News December 28, 2025
விஜயகாந்தின் நட்பை நினைத்து உருகிய கமல்

திரையில் மட்டும் அல்ல மக்கள் மனங்களில் நாயகனாக ஒளிரும் விஜயகாந்துக்கு 2-ம் ஆண்டும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகர் கமல் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில் ஈகை எனும் அருங்குணத்தால் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த என் விஜயகாந்தின் நட்புத் தருணங்கள் நினைவிலாடுகின்றதாக குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 31, 2026
BREAKING: ஆசிரியர்களுக்கு ஒரு மாத சம்பளம் கட்!

சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி 36-வது நாளாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் தலையில் அரசு பேரிடியை இறக்கியுள்ளது. அவர்களுக்கு ‘No work No pay’ அடிப்படையில் ஜன. மாத சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே, போராட்டத்தை கைவிடவில்லை எனில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு கூறியிருந்தது. அதன்படி சம்பளம் வழங்கப்படாததால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
News January 31, 2026
ரயில்வேயில் 22,000 வேலைகள்.. இன்றே விண்ணப்பிக்கலாம்..

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 22,000 குரூப் – D பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி: 10TH, ஐடிஐ. வயதுவரம்பு: 01.01.2026 தேதியின்படி 18- 33 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2026. விண்ணப்பக் கட்டணம்: பட்டியலினத்தவர்களுக்கு ₹250, மற்றவர்களுக்கு ₹500. <
News January 31, 2026
வெள்ளி நகைகள் விலை ₹55,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

<<19009659>>தங்கம் விலையை<<>> போன்று வெள்ளி விலையும் இன்று (ஜன.31) மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி ₹55 குறைந்து ₹350 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி ₹55,000 குறைந்து ₹3.5 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைகள் வாங்க நினைத்தோர் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த 3 மாதங்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் ₹55,000 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


