News December 28, 2025
சொகுசு கப்பலில் தவிக்கும் 123 பேர்!

பப்புவா நியூ கினியில் உள்ள பாறையில் மோதி தரைதட்டிய ஆஸி. சொகுசு கப்பல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கெயின்ஸிலிருந்து டிச.18 அன்று புறப்பட்ட அந்த கப்பலில் 80 பயணிகள், 43 ஊழியர்கள் உட்பட 123 பேர் உள்ளனர். வரும் டிச.30 உடன் பயணம் முடிவடைய இருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதே கப்பலில் கடந்த அக்டோபரில் பயணித்த 80 வயது மூதாட்டி மரணமடைந்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 31, 2025
அரசியல் பிரபலத்தின் வீட்டில் துயரம்

மூத்த அரசியல்வாதி தமிழருவி மணியனின் மனைவி பிரேமாகுமாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது உடலுக்கு வைகோ, பாரிவேந்தர் உள்ளிட்டோர் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவருடைய இறுதிச்சடங்கு இன்று காலை விருகம்பாக்கம் இல்லத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
News December 31, 2025
புத்தாண்டில் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்!

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘ஜனநாயகன்’ டிரெய்லர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை ஜன.1-ம் தேதி படக்குழு அறிவிக்கவுள்ளதாகவும், ஜன.2 மாலை டிரெய்லர் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது. அதோடு ஜன.4-ல் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு டிவியில் ஒளிபரப்பு ஆவதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய்யின் One Last Dance-ஐ பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்?
News December 31, 2025
டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு

தமிழகம் முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ஆக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் டிஜிபி ஆகவும், பால நாகதேவி குற்றப்பிரிவு டிஜிபி ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ் தயாள் பொறுப்பேற்கவுள்ளார்.


