News December 28, 2025
குளிர் காலத்தில் தயிர் சாப்பிடலாமா?

குளிர் காலத்தில் தயிர் சாப்பிடுவது நல்லதல்ல என்று பலர் நினைக்கிறார்கள். உண்மையில் அப்படியல்ல. தயிரை அப்படியே பிரிட்ஜில் இருந்து எடுத்து சாப்பிடாமல், வெளியே எடுத்து அரை மணி நேரம் கழித்து உட்கொள்வது நல்லது. மேலும், நமக்கு குளிர்காலத்தில் இயல்பாகவே வழக்கத்தை விட அதிகமாக பசி எடுக்கும். அப்போது கனமான உணவுகளுடன் தயிரை சேர்த்து சாப்பிடுவது எளிதில் ஜீரணிக்க உதவும். அஜீரணத்தையும் குறைக்கும்.
Similar News
News January 3, 2026
ஷாருக்கான் கொல்கத்தாவில் நுழைய எதிர்ப்பு!

இந்தியா-வங்கதேச உறவில் விரிசல் எழுந்துள்ள நிலையில், வங்கதேச வீரரை ஏலத்தில் எடுத்த ஷாருக்கானை கொல்கத்தாவிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என மேற்குவங்க பாஜக தலைவர் கௌஸ்தவ் பக்ஜி கூறியுள்ளார். மேலும், வங்கதேச வீரரான முஸ்தாபிசுர் ரஹ்மான் போன்றோர் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார்கள், ஆனால் அந்நாட்டினர் ஆயுதங்களால் நமது இந்து சகோதரர்களை கொல்வார்கள். இந்த இரண்டும் ஒரே நேரத்தில் நடக்க முடியாது என கூறினார்.
News January 3, 2026
மூக்கடைப்பு இருக்கா? இதை செய்தாலே சரியாகும்!

குளிர்காலம் வந்துவிட்டால் போதும் சளி, இருமலை போலவே மூக்கடைப்பு பிரச்னைகளும் ஏற்படும். வீட்டிலேயே இதனை சரி செய்யலாம். ➤திக்கான காட்டன் துணியை எடுத்துக் கொள்ளுங்கள் ➤அதை மடித்து, சூடான நீரில் நனைத்துக் கொள்ள வேண்டும் ➤மிதமான சூட்டில் இருக்கும்போது மூக்கின் மேல் வைத்து ஒத்தடம் கொடுங்கள். இப்படி செய்யும் போது மூக்கை சுற்றி ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மூக்கடைப்பு நீங்கும். அனைவருக்கும் SHARE IT.
News January 3, 2026
RSS துணை ராணுவப்படை அல்ல: மோகன் பகவத்

RSS-க்கு எதிராக போலியான பிம்பம் கட்டமைக்கப்படுவதாக மோகன் பகவத் கூறியுள்ளார். சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு RSS பாடுபடுவதாக குறிப்பிட்ட அவர், மீண்டும் அந்நிய சக்தியின் பிடியில் இந்தியா சிக்கிவிடக்கூடாது என்பதே தங்களது அமைப்பின் நோக்கம் என்றும் தெரிவித்தார். சீருடை அணிந்து, பேரணி செல்வதால் RSS-ஐ துணை ராணுவப்படை என நினைப்பது மிகவும் தவறானது எனவும் அவர் பேசியுள்ளார்.


