News December 28, 2025

இனி ஒரு தம் 72 ரூபாய்.. அதிர்ச்சி

image

புகையிலைப் பொருள்கள் மீதான வரியை அதிகரிக்கும் வகையில் கலால் வரி திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் காரணமாக, குறைந்த விலையில்(₹18) கிடைக்கும் ஒரு சிகரெட்டின் விலை, இனி ₹72-ஆக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது சிகரெட் பழக்கத்தை கட்டுப்படுத்த உதவும் என்பதால், இந்த விலையேற்றத்தை வரவேற்று பலரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

Similar News

News January 2, 2026

சற்றுமுன்: குடிநீரால் 14 பேர் பலியான துயரம்

image

இந்தூரில் <<18732273>>கழிவுநீர் கலந்த குடிநீரை<<>> குடித்த 14 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஆனால், அரசு தரப்பு 7 பேர் மட்டுமே பலியானதாக கூறியுள்ளது. இது தொடர்பாக பேசிய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, இறப்பு எண்ணிக்கை மாறுபாடு குறித்து விசாரித்து அனைவரது குடும்பத்திற்கும் நிதியுதவி அளிப்போம் என்றார். MP-ல் உள்ள இந்தூர் தூய்மையான நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது.

News January 2, 2026

RO-KO விளையாட அதிக ODI நடத்த வேண்டும்: பதான்

image

IND vs NZ இடையே 3 போட்டிகளைக் கொண்ட ODI தொடர், வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், 5 போட்டிகளை கொண்ட தொடரை ஏன் நடத்தக் கூடாது என இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார். முத்தரப்பு, நான்கு தரப்பு ODI தொடர்களை நடத்தலாமே எனவும், RO-KO தொடர்ந்து விளையாட, அதிக ODI-களை BCCI நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கடைசியாக 2019-ல் 5 போட்டிகளைக் கொண்ட ODI தொடரில் விளையாடியது.

News January 2, 2026

‘பொங்கல் பரிசாக ₹5,000 வழங்குக’.. நயினார் அறிக்கை

image

பொங்கல் பரிசு விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பொங்கலுக்கு ₹5,000 வழங்குவார்கள் என எதிர்பார்த்துவரும் நிலையில், மக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை பரிசளித்துள்ளதாக சாடியுள்ளார். ஆட்சி முடியும் தருவாயிலாவது போங்காட்டத்தை ஒதுக்கி வைத்து, ₹5,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசை சரிவர வழங்குமாறு CM ஸ்டாலினுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். உங்க கருத்து?

error: Content is protected !!