News December 28, 2025
நாகை: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
Similar News
News January 13, 2026
நாகை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

நாகை மாவட்டத்தில் திருவள்ளுவர் தினம் (ஜன.16) மற்றும் குடியரசு தினம் (ஜன.26) ஆகிய இரண்டு நாட்களிலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் கூடங்களை மூட வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதனை மீறி அன்றைய தினம் யாராவது மதுபான விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
News January 13, 2026
நாகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்துடன் (TANFINET) இணைந்து நாகை மாவட்ட கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில் விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://tanfinet.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று(ஜன.12) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


