News May 2, 2024

IPL: முதல்முறையாக அவுட்டான ‘தல தோனி’

image

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி, நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக அவுட்டாகியுள்ளார். பஞ்சாப்பிற்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் 7ஆவதாக களமிறங்கிய அவர், 1 Six, 1 Four என விளாசி 14 ரன்கள் விளாசி அசத்தினார். இதனிடையே, அர்ஷ்தீப் சிங் வீசிய 20ஆவது ஓவரின் கடைசி பந்தில், 2ஆவது ரன் ஓடும்போது ரன் அவுட்டானார். இதனால், ஒருமுறை கூட அவுட்டாகாத வீரர் என்ற பெருமையை இழந்தார்.

Similar News

News March 10, 2026

லாக்டவுன் போல மாறும் சூழல்..

image

போரினால் உலகளவில் கச்சா எண்ணெய், கேஸ் & பெட்ரோலிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியாவில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தத்தால் ஹோட்டல்கள் மூடப்படுகின்றன, விடுதிகளில் மெனுக்கள் குறைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக நிறுவனங்கள் WFH ஆப்ஷனையும், பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளையும் கொண்டுவரலாம். ஏற்கெனவே பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் WFH நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

News March 10, 2026

கர்ப்பிணிகளே, இதனால் உங்க குழந்தைக்கு ஆபத்து!

image

உண்ணும் உணவு, தண்ணீர் வழியாக தினம் தினம் மனிதனின் உடலில் லட்சக்கணக்கான மைக்ரோ பிளாஸ்டிக் கலக்கிறது. இதனால் கேன்சர் போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, முடிந்த வரை அனைவரும் (குறிப்பாக கர்ப்பிணிகள்) பிளாஸ்டிக் பொருள்களை தவிருங்கள். இல்லையென்றால் அவை உங்கள் ரத்தத்தில் கலந்து தாய்ப்பால் வழியாக உங்கள் குழந்தையின் உடலுக்குள் செல்லும். அடுத்த தலைமுறையை காக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

News March 10, 2026

அட்டைப் பெட்டியில் இறந்த குழந்தையை சுமந்த தந்தை!

image

ஜார்க்கண்டில் குழந்தை இறந்து பிறந்த துக்கத்தில் தவித்த தந்தைக்கு, குழந்தையை வீட்டுக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காதது மேலும் துயரில் ஆழ்த்தியுள்ளது. கண்ணீரிலும் வேதனையிலும் குழந்தையின் உடலை Card-Board பெட்டியில் வைத்து, ஆட்டோவில் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். பெரும் வளர்ச்சியை நாடு கண்டுள்ளதாக பெருமை பேசும் நிலையில், இன்னும் பலர் அடிப்படை வசதி கூட கிடைக்காமல் தவிப்பது வேதனையே!

error: Content is protected !!