News December 28, 2025
கோவை: 10th/ ITI முடித்தால் ரயில்வேயில் உடனடி வேலை

ரயில்வேயில் காலியாகவுள்ள 22,000 “குரூப் டி” பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th/ ITI. வயது வரம்பு: 18 – 33. தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடற்தகுதி, மருத்துவ சோதனை. சம்பளம்: ரூ.18,000 முதல் வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 2026, ஜன., 21 முதல் பிப்., 20 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
Similar News
News December 31, 2025
ரயில்கள் நேரம் மாற்றம்

கேரள மாநிலத்திலிருந்து இயக்கப்படும் சில ரயில்கள் (ம) தூத்துக்குடி–மேட்டுப்பாளையம் ரயிலின் நேரங்கள் ஜன.1 முதல் மாற்றப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பாலக்காடு–சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் காலை 8.30 மணிக்கு புறப்படும். பாலக்காடு–திருச்செந்தூர் விரைவு ரயில் பொள்ளாச்சியை 7.40 மணிக்கு சென்றடையும். தூத்துக்குடி–மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலும் புதிய நேரப்படி இயக்கப்படும்.
News December 31, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (31.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 31, 2025
கோவைக்கு இனி இவர் தான்!

70 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தும், பதவி உயர்வு அளித்தும் தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதன்படி கோவை சிட்டி போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வந்த சரவணசுந்தர் மேற்கு மண்டல ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கோவை சிட்டி போலீஸ் கமிஷனராக டாக்டர்.கண்ணன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவர் பொறுப்பேற்பார் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


