News December 28, 2025

தாம்பரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

தாம்பரம்-ராமேஸ்வரம் மற்றும் கோவை-ராமேஸ்வரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. தாம்பரத்தில் இருந்து நாளை (29 ஆம் தேதி) இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். மறுமார்க்கமாக, ராமேசுவரத்தில் இருந்து 30ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Similar News

News December 29, 2025

செங்கை: ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் உடனே CHECK!

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு<> க்ளிக் செய்யுங்க<<>>…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 29, 2025

செங்கை: கீழே விழுந்த முதியவர் சம்பவ இடத்துலயே பலி!

image

செய்யூர் அருகே சாமந்திபுரம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்வில் பங்கேற்க பெங்களூருவிலிருந்து வந்த சங்கர் (60), மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார். நல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே சாலையில் குறுக்கே வந்த நாய் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் பயணித்த ஸ்ரீராம் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து செய்யூர் போலீசார் விசாரணை செய்கின்றனர்.

News December 29, 2025

செங்கை: சொந்த மகனையே துடிதுடிக்க கொன்ற தந்தை!

image

செங்கல்பட்டு, பெருந்தண்டலம் பகுதியில் வசித்து வந்த வெஸ்லிக்கு போதை பழக்கம் இருந்துள்ளது. அவருக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்த நிலையில் வெஸ்லி போதைப்பொருள் பயன்படுத்துவைத்தை அறிந்த பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். இதனால் மனமுடைந்த வெஸ்லி வீட்டிற்கு வந்து சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த வெஸ்லி தந்தை இரும்பு கம்பியால் வெஸ்லியை துடிக்க துடிக்க கொன்றுள்ளார்.

error: Content is protected !!