News December 28, 2025

முதல் மரியாதை கதையில் ரஜினி?

image

ஒரு நடுத்தர வயது மனிதனுக்கும், இளம் பெண்ணுக்கும் இடையேயான பரஸ்பர அன்பை ‘முதல் மரியாதை’ படம் வெளிப்படுத்தியிருக்கும். இதுபோன்ற படத்தில், ரஜினி நடித்தால் எப்படி இருக்கும்? இந்நிலையில், தன்னிடம் அப்படி ஒரு கதை இருப்பதாகவும், அது ரஜினிக்குதான் பொருத்தமாக இருக்கும் எனவும் இயக்குநர் சுதா கொங்கரா கூறியுள்ளார். தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் மட்டுமே நடித்து வரும் சூப்பர்ஸ்டார் காதல் கதையை டிக் அடிப்பாரா?

Similar News

News January 1, 2026

புத்தாண்டில் வெளியான DCM பட அப்டேட்!

image

இயக்குநர் சுரேந்தர் ரெட்டியின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஆந்திர DCM பவன் கல்யாண் நடிப்பது உறுதியாகி உள்ளது. அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், இனி சினிமாவில் நடிக்கமாட்டார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் கதையாசிரியர் வம்சி தனது X பதிவில், இந்த கனவு படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். ராம் தல்லூரி இப்படத்தை தயாரிக்கிறார்.

News January 1, 2026

இன்று முதல் கார்களின் விலை உயர்கிறது

image

தீபாவளி பரிசாக மத்திய அரசு GST வரியை குறைத்ததால், பைக், கார்களின் விலையும் சரிந்தது. இதன் காரணமாக, வாகன பிரியர்கள் புதிய வாகனங்களை ஆர்வமுடன் வாங்கினர். இந்த நிலையில், உற்பத்தி செலவை காரணம் காட்டி, இந்தியாவில் இன்று முதல் கார்களின் விலை 3% வரை உயர்த்தப்படுகிறது. அதன்படி, Honda, Hyundai, Renault, Nissan, BYF, BMW உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் கார்களின் விலையை உயர்த்துகின்றன.

News January 1, 2026

வெந்நீரில் வாழும் இந்த அதிசய மீனை பற்றி தெரியுமா?

image

USA, நெவாடா பாலைவனத்தில் ஒரு சிறிய பாறை இடுக்கிற்குள் வாழும் ‘Devils Hole pupfish’ மீன்கள் அறிவியலுக்கே சவால் விடுகின்றன. வெறும் கட்டைவிரல் அளவே உள்ள இவை, 34°C கொதிக்கும் வெந்நீரில் ஆக்சிஜன் இல்லாமலே உயிர்வாழும் Paradoxical Anaerobism என்ற விந்தையை கொண்டுள்ளன. உலகின் மிகச்சிறிய இடத்தில் வாழும் இந்த முதுகெலும்புயிரி, மரபணு சவால்களை மீறி பல நூற்றாண்டுகளாக உயிர்வாழ்வது ஒரு தீராத உயிரியல் மர்மம்!

error: Content is protected !!