News December 28, 2025

சிவகங்கை விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வருகிற டிச.31 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது என ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார். அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்துப் பயன் பெறலாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News December 31, 2025

சிவகங்கை: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

image

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க

News December 31, 2025

சிவகங்கை: 2025-ல் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள்.!

image

1. காலியான நட்டாக்குடி கிராமம்
2. காவலர்கள் தாக்குதலில் அஜித் மரணம்
3. திருப்பத்தூர் விபத்து – 11 பேர் பலி
4. மல்லக்கோட்டை குவாரி விபத்து – 6 பேர் பலி
5. ஒரே ஆண்டில் 123 பேருக்கு குண்டாஸ்
6. SIR திருத்தம் – 1லட்சம் பேர் நீக்கம்
7. சொ.கு வழக்கில் அமைச்சர் K.R.P கருப்பன் விடுவிப்பு
8. உ.ஸ்டாலின் மனுக்கள் ஆற்றில் வீச்சு – முதுநிலை வரைவாளர் கைது
9. உதயநிதி ஆய்வில் தவறான தகவல் – PDO சஸ்பெண்ட்

News December 31, 2025

சிவகங்கை: பெண்களுக்கு ரூ.3 லட்சம் கடன்.. உடனே APPLY!2

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!