News May 2, 2024
நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிக தண்ணீர் இருக்கிறது

நிலவின் தென்துருவப் பகுதிகளை விட வடதுருவப் பகுதிகளில் அதிகளவு தண்ணீர் இருப்பதாக இஸ்ரோ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலவின் மேற்பரப்பிலிருந்து சில அடி ஆழத்தில் இருக்கும் பனிக்கட்டிகள், துருவப் பகுதிகளில் இருக்கும் பனிக்கட்டிகளை விட 5-8 மடங்கு பெரியளவில் உள்ளதாகவும், சந்திரயான் 4 திட்டத்தில் தென் துருவத்தில் தரைப் பகுதியை துளையிட்டு ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டு உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
Similar News
News March 4, 2026
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாளாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
News March 4, 2026
காங்கிரஸுடன் கூட்டணி.. திமுகவினர் அதிருப்தியா?

திமுக-காங்., தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், 2-வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 36 தொகுதிகள் + 2 ராஜ்யசபா சீட் என்ற கணக்கிற்கு இறங்கிவந்த காங்கிரஸிடம், 28 + 1 கொடுக்க தயார் என திமுக தலைமை கூறியுள்ளது. ஆனால், காங்., கொடுக்கும் அழுத்தத்திற்கு பணியக்கூடாது என்றும் 27+ 1 கொடுப்பதே அதீதம் என்று ஸ்டாலினிடம் திமுக நிர்வாகிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
News March 4, 2026
₹5,083 கோடிக்கு ஒப்பந்தம்.. பலத்தை கூட்டும் இந்தியா

இந்திய கடலோர காவல்படை & கடற்படைக்கு ₹5,083 கோடிக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. Make In India திட்டத்தில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸிடம் 6 Mk-III வகை ஹெலிகாப்டர்களும், ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து ஷெட்டில் ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன.


