News December 28, 2025
திருச்சி: மன உளைச்சலில் தற்கொலை!

புலிவலம் அடுத்த ஓமந்தூர் பகுதியை சேர்ந்தவர் சிங்கதுரை. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், சிங்கதுறை அடிக்கடி மதுபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி பிரிந்து சென்றதால், மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று அப்பகுதியில் உள்ள மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து புலிவலம் போலீசார் சிங்கதுரை உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 10, 2026
திருச்சி: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

திருச்சி மக்களே, இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News January 10, 2026
திருச்சி: வெளிநாடு செல்ல ஆசையா?

திருச்சி மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <
News January 10, 2026
திருச்சி: 3 நாட்களுக்கு ரயில் ரத்து!

பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி – காரைக்கால் டெமு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி – காரைக்கால் டெமு ரயிலானது வரும் 11, 14, 20 ஆகிய தேதிகளில், திருவாரூர் – காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து திருவாரூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


