News December 28, 2025
தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தி.மலை மக்களே ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
Similar News
News January 4, 2026
தி.மலை: கல்லூரி மாணவன் அடித்துக் கொலை!

ஆரணியை சேர்ந்த டேனி வளனரசு (19) வேலூர் சாய்நாதபுரம் பகுதியில், கிஷோர் கண்ணன் (19), பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது வாலிபர் ஆகியோருடன் வாடகை வீட்டில் தங்கி வந்தார். கல்லூரி மாணவர். தருமபுரி மாணவன் ஊருக்கு சென்றுவிட்டார். மகனை காணவில்லை என டேனியின் தந்தை புகாரளித்த நிலையில், போலீசார் கிஷோர் கண்ணனிடம் விசாரித்ததில், பார்த்தசாரதி, கிஷோர் கண்ணன் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது.
News January 4, 2026
தி.மலை: கிணற்றில் மூழ்கி இளம்பெண் பரிதாப பலி!

வெம்பாக்கம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகள் சத்யா (21). இவர் வாலாஜாபாத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்தார். சத்யா நேற்று முன்தினம் சைக்கிளில் தனது நிலத்தில் நடைபெற்று வந்த விவசாயப் பணியை பார்வையிட சென்றார். அப்போது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர்.