News December 28, 2025
ராணிப்பேட்டை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

ராணிப்பேட்டை மக்களே ‘பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
Similar News
News December 29, 2025
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கேஸ் நுகர்வோர்கள் மற்றும் விநியோகிக்கும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் நாளை (டிச.30) மாலை 3 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது . இதில், நுகர்வோர்கள் கலந்து கொண்டு, சேவை குறைபாடுகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன்பெறுமாறு கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News December 29, 2025
ராணிப்பேட்டை: 2026-யில் இத மிஸ் பண்ணிடாதீங்க!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., நமது மாவட்டத்தில் அரசு சார்பாக இலவச தையல் பயிற்சி உதவித் தொகையுடன் வழங்கப்படுகிறது. வரும் 2026யில் தொடங்கும் இந்தப் பயிற்சியில் சேர்ந்து புதியதாக ஒரு கலையை கற்பதாக புத்தாண்டை தொடங்குங்கள். இதற்கு விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <
News December 29, 2025
ராணிப்பேட்டை: விபத்தில் தொழிலாளி பலி!

வாலாஜாவை அடுத்த பூண்டி கிராம மந்தைவெளி தெருவைச் சேர்ந்தவர் சம்பந்தம்(65). கட்டட தொழிலாளியான இவர் கடந்த டிச.25ஆம் தேதி இரவு அங்குள்ள குளத்து தெருவில் சாலையைக் கடந்த போது பைக் மோதி பலத்த காயமடைந்தார். அவரை வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று(டிச.28) பலனின்றி உயிரிழந்தார்.


