News December 28, 2025

க்யூட் ஹேர்ஸ்டைலில் கலக்கும் ஸ்ரீலீலா! PHOTOS

image

தெலுங்கு நடிகையாக இருந்தாலும், நடிப்பு, நடனம் மூலம் தமிழ் மட்டுமல்லாமல், தென்னிந்தியா முழுவதும் ரசிகர்ளை கட்டிப்போட்டுள்ளார் ஸ்ரீலீலா! இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அவர், தற்போது க்யூட்டான ஹேர்ஸ்டைலில் சில போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வரும் நிலையில், அந்த போட்டோக்களை மேலே SWIPE பண்ணி பாருங்க!

Similar News

News January 15, 2026

மக்கள் நாயகன் காலமானார்

image

சுற்றுச்சுழல் போராளி ஜி.ராஜ்குமார்(70) உடல்நலக்குறைவால் காலமானார். கேரளாவை சேர்ந்த இவர் TN-ன் கொடைக்கானல் முதல் கேரளாவின் மூணாறு வரை உள்ள காட்டுப்பகுதிகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக ‘Save Kurinji’ என்ற நடைபயணத்தை நடத்தினார். இதனால் மூணாறுக்கு அருகில் உள்ள 3,200 ஹெக்டேர் நிலப்பரப்பு குறிஞ்சி மலை, சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இவரது சேவையை மக்கள் மறந்தாலும் மலைகளும், காடுகளும் என்றும் நினைவில் கொள்ளும்.

News January 15, 2026

சற்றுமுன்: கூட்டணி முடிவை கூறினார் ஓபிஎஸ்

image

கூட்டணி பற்றி கேட்டாலே தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓபிஎஸ் கூறி வந்தார். இன்று தை முதல் நாள் என்பதால் கூட்டணி பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘தை மாதத்தில் 30 நாள்கள் உள்ளது, அதில் ஏதாவதொரு நாளில் அறிவிப்பேன்’ என மீண்டும் OPS சஸ்பென்ஸ் வைத்துள்ளார். அப்போது, ‘சீக்கிரம் முடிவை சொல்லுங்கள், தினம் தினம் செத்து பிழைக்கிறோம்’ என அங்கிருந்த ஒருவர் கூற, சிரிப்பலை எழுந்தது.

News January 15, 2026

சாப்பிட்ட பிறகு வயிறு வலிக்குதா? உஷார் மக்களே!

image

சாப்பிட்ட பிறகு வயிற்றில் ஊசி குத்துவது போன்ற வலி ஏற்படுகிறதா? இது வெறும் அஜீரணமல்ல; பித்தப்பை கற்களின் அறிகுறியாகவும் இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். *சாப்பிட்டதும், வலது மேல் வயிறு அல்லது மேல் முதுகில் வலி, வாந்தி அல்லது குமட்டல் இருந்தால் உடனே டாக்டரை அணுக வேண்டும். *பெண்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம். பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!