News December 28, 2025

கரூர் மாவட்டத்தில் 6 பேர் கைது!

image

கரூர், தென்னிலை, வெள்ளியணை, வாங்கல், வெங்கமேடு ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற முத்துசாமி (41), ஆறுமுகம் (56), ராஜா (37), சண்முகம் (60), சேகர் (53), ஆசைதங்காள் (63) ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 150 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Similar News

News December 29, 2025

கரூரில் மணல் கடத்தல்; 4 பேர் அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், திருக்காம்புலியூர் காவிரி ஆற்றுப்படுகையில் டயர் மாட்டு வண்டியில் மணல் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற நீர்வளத்துறை உதவி பொறியாளர் கார்த்திக் மணல் கடத்தலில் ஏற்பட்ட 4 பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை எடுத்து சத்திரியன் 25, ஆறுமுகம் 55, மலைக்கள்ளன் 46, இளங்கோவன் 43 ஆகிய 4 பேர் மீது மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர்.

News December 29, 2025

கரூர்: ரூ.1.20 லட்சம் சம்பளம்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

image

பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: ஒரு டிகிரி. சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை. விண்ணப்பிக்க: https://ibpsreg.ibps.in/boinov25/. விண்ணப்பிக்க ஜன.5 கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News December 29, 2025

கரூர்:ஆண் குழந்தை இருந்தால் ரூ.3,14,572 ?

image

கரூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!