News December 28, 2025

பவார் VS பவார்: யூடர்ன் அடித்த அஜித் பவார்

image

மும்பை மாநக​ராட்சி தேர்​தலில் தனித்​துப் போட்டியிட தேசி​ய​வாத காங்​கிரஸின் அஜித் பவார் அணி முடிவு செய்​துள்ளது. MH-ல் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு ஜன.15-ல் தேர்​தல் நடக்கிறது. இந்நிலையில் ஆளும் மகாயுதி கூட்டணியில் இருந்து விலகிய அஜித்பவார், தனது பெரியப்பா சரத்பவாருடன் மீண்டும் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் அதிலிருந்து யூடர்ன் அடித்த அஜித்பவார் தனித்​துப் போட்டியிட முடிவெடுத்துள்ளார்.

Similar News

News January 30, 2026

பள்ளிகளுக்கு விடுமுறை.. வந்தாச்சு அப்டேட்

image

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அவர்களுக்கு பிப்ரவரி சற்று சோதனையான காலம். அரசு நாள்காட்டிப்படி, தைப்பூசம்(பிப்.1) நாளில் மட்டும் அரசு விடுமுறை. அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. மற்றபடி, வார விடுமுறையான 8 நாள்கள் (பிப். 1, 7, 8, 14, 15, 21, 22, 28) மட்டுமே விடுமுறை. பிப்ரவரியில் 28 நாள்கள்தான் என்பதால், மற்ற 20 நாள்கள் பள்ளிகள் இயங்கும். SHARE IT.

News January 30, 2026

BREAKING: கடன் தள்ளுபடி.. தேர்தல் வாக்குறுதி அளித்தார்

image

2026 தேர்தலையொட்டி அதிரடியான வாக்குறுதிகளை EPS அறிவித்து வருகிறார். ஏற்கெனவே, குலவிளக்கு திட்டத்தின்கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2,000, பெண்களுக்கு ஸ்கூட்டி வாங்க ₹25,000 மானியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்தால் மாற்றுத் திறனாளிகளின் கூட்டுறவு சங்கக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தற்போது அவர் அறிவித்துள்ளார்.

News January 30, 2026

மறைந்த பின் ரோபோ சங்கருக்கு கவுரவம்.. உருக்கம்

image

தந்தைக்கும் மகளுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான கெளரவம் கோடிகளில் சிலருக்கு தான் கிடைக்கும் என்பார்கள். அப்படியானால் அந்த கோடியில் ரோபோ சங்கரும், அவருடைய மகள் இந்திரஜாவும் இருக்கின்றனர். இந்நிலையில், TN அரசின் சிறந்த காமெடி நடிகர், நடிகைக்கான விருது இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கெளரவத்தை பிரபலங்கள் பலரும் வாழ்த்த, அதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து இந்திரஜா நெகிழ்ந்துள்ளார்.

error: Content is protected !!