News May 1, 2024

நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் நம்பர் பிளேட் கட்டுப்பாடு

image

தமிழகம் முழுவதும் தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட் பொருத்துவது தொடர்பான கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. போலி நபர்கள் POLICE, PRESS போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதை தவிர்க்கும் வகையில், மே 2 முதல் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. விதிகளை மீறுவோருக்கு ₹500-₹1000 வரை அபராதம் விதிக்கப்படும் என போலீசார் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.

Similar News

News August 14, 2025

சபாநாயகர் அப்பாவு காரை சுற்றிவளைத்த பெண்கள்

image

நெல்லை மாவட்டம் திசையின்விளை அருகே முருகேசபுரத்தில் ₹423 கோடி மதிப்பில் குடிநீர் இணைப்பு திட்டத்தை துவக்கி வைக்க சபாநாயகர் அப்பாவு சென்றுள்ளார். அப்போது அவரது காரை சுற்றிவளைத்த பெண்கள் 40% கூட முடிவடையாத இத்திட்டத்துக்கு விளம்பர தேடி வந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் திசையின்விளை பகுதியை அப்பாவு பாரப்பட்சமாக புறக்கணிப்பதாகவும், போதிய குடிநீர் வசதி இல்லை எனவும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.

News August 14, 2025

வைரமுத்து மீது நடவடிக்கை தேவை: அர்ஜுன் சம்பத்

image

சென்னையில் நடைபெற்ற கம்பன் விழாவில் ராமனை பைத்தியக்காரன் என வைரமுத்து இழிவுப்படுத்தியதாகவும், அவர் மீது நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளதாகவும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார். ஆளுநரிடமிருந்து பட்டம் பெறுவதை தவிர்த்த மாணவி கிறிஸ்துவர் என்றும், ஆளுநரை உள்நோக்கத்துடன் அவர் அவமதித்துள்ளதால் அவரது பட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

News August 14, 2025

ஆகஸ்ட் 14: வரலாற்றில் இன்று

image

1947 – பிரிட்டனில் இருந்து பாகிஸ்தான் விடுதலை பெற்ற நாள்.
1911 – பிரபல ஆன்மிக தலைவர் வேதாத்திரி மகரிஷியின் பிறந்த தினம்.
2007 – ஈராக்கில் கட்டானியா என்ற இடத்தில் நடந்த 4 தொடர் குண்டுவெடிப்புகளில் 334 பேர் கொல்லப்பட்டனர்.
2016 – பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைந்த தினம்.
2018 – இத்தாலியில் உள்ள ஜெனோவா நகரில் பாலம் இடிந்து விழுந்ததில் 35 பேர் உயிரிழப்பு.

error: Content is protected !!