News December 28, 2025
தஞ்சை: SBI வங்கியில் வேலை அறிவிப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: ரூ.6.20 லட்சம் (ஆண்டுக்கு)
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 31, 2025
தஞ்சாவூர்: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News December 31, 2025
தஞ்சை: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி, அவருடைய வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (25) என்பவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.
News December 31, 2025
தஞ்சையில் மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை

பாபநாசம் தாலுகா உள்ளிக்கடை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் 65 வயது மூதாட்டி, கூலி வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மும்மூர்த்தி (46) என்பவர், மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மூதாட்டி அளித்த புகாரின் பேரில், போலீசார் மும்மூர்த்தியை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


