News December 28, 2025
அனைத்து கட்டடங்களுக்கும் ₹1,000.. TN அரசு நிர்ணயித்தது

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு ₹500, பிற பயன்பாட்டு கட்டடங்களுக்கு ₹1,000 ஆகும். மேலும், சொத்துவரி பெயர் மாற்றத்தின்போதே குடிநீர் கட்டணம், புதை சாக்கடை இணைப்பு ஆகியவற்றை சம்பந்தப்பட்டவரின் பெயருக்கு அதே விண்ணப்ப அடிப்படையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News January 12, 2026
BREAKING: பொங்கலுக்கு கூடுதல் விடுமுறை! அரசு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போகி அன்றும் (ஜன.14) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக, ஜன.15 முதல் ஜன.17 வரை மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், ஒருநாள் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 12, 2026
வீட்டிலேயே பழங்களை வளர்த்து சாப்பிட ஆசையா?

தோட்டம் இல்லாதவர்களும் பழங்களை வளர்த்து சாப்பிட வேண்டுமா? வீட்டு மாடியில் அல்லது பால்கனியில் சில வகையான பழச் செடிகளை வளர்க்கலாம். குட்டை ரக செடிகள் ஏராளமாக உள்ளன. அவற்றை பூந்தொட்டியில் வைத்து வீடுகளிலேயே வளர்க்கலாம். இந்த செடிகளுக்கு 6-8 நேரம் சூரிய ஒளியும், சரியான பராமரிப்பும் தேவை. அந்த வகையில், என்னென்ன பழச் செடிகள் வளர்க்கலாம் என்பதை அறிய, மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க.
News January 12, 2026
மெஸ்ஸி செயலால் சரசரவென உயர்ந்த கொக்க கோலா மதிப்பு

பிரபலங்கள் பேசும் சிறிய விஷயங்கள் கூட நிறுவனங்களுக்கு பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கால்பந்து நட்சத்திரமான மெஸ்ஸி, ‘எனக்கு ஒயின் பிடிக்கும், நான் அதை ஸ்ப்ரைட்டுடன் சேர்த்து குடிக்கிறேன்’ என்று தெரிவித்தார். இதையடுத்து, கொக்க கோலா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 3 நாள்களில் ₹1.16 லட்சம் கோடி அதிகரித்தது. 2021-ல் ரொனால்டோ கோக் பாட்டிலை ஒதுக்கி வைத்ததால் பங்குகள் சரிந்தது குறிப்பிடத்தக்கது.


