News December 28, 2025

அன்று கோடீஸ்வரர்.. இன்று Rapido டிரைவர்!

image

ஒருகாலத்தில் கோடிகளில் புரண்டவரை Rapido டிரைவராக மாற்றியுள்ளது விதி. கொரோனா காலக்கட்டத்தில் ₹14 கோடி இழந்தவர், இன்று பிழைப்புக்காக பைக் ஓட்டுகிறார். அவர் தனது கதையைக் கூறியபோது, கலங்கிய அவரது கண்கள் அந்தப் பயணியையும் நெகிழ வைத்துள்ளன. வாழ்க்கை போராட்டமாக மாறினாலும், ‘இன்னும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. தோல்வியை ஏற்க மாட்டேன்’ என அவரின் வார்த்தைகள், வாழ்க்கை மீது நமக்கும் நம்பிக்கை கொடுக்கிறது.

Similar News

News February 14, 2026

காதலர் தினம்.. OYO-க்கு போறீங்களா..

image

காதலர் தினத்தையொட்டி ஹோட்டல் அறைக்கான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. இதை பயன்படுத்திக் கொண்டு தள்ளுபடி விலையில் Oyo அறைகள் இருப்பதாக கூறி மோசடியாளர்கள் ஒரு விளம்பர யுக்தியை முன்னெடுத்துள்ளனர். அப்படி ஆன்லைனில் வரும் Link-குகளை க்ளிக் செய்தால், அடுத்த நிமிடமே பேங்கில் உள்ள உங்களது பணம் மொத்தமும் அபேஸ் ஆகிவிடும். எனவே, ‘Link-அ தொட்ட… நீ கெட்ட’ என போலீசார் எச்சரிக்கின்றனர். SHARE.

News February 14, 2026

FLASH: சீமான் போட்டியிடும் தொகுதி இதுவா..!

image

சீமான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சொந்த மாவட்டத்தில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கையின் காரைக்குடி தொகுதியில் அவர் களமிறங்க களப்பணிகளை நாதகவினர் தொடங்கியுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 21-ம் தேதி திருச்சியில் வெளியாக உள்ளதாம். கடந்த 2016 தேர்தலில் கடலூர், 2021-ல் திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான் இம்முறை காங்கிரஸின் தொகுதியை குறிவைத்துள்ளார்.

News February 14, 2026

323 பணியிடங்கள், ₹1 லட்சம் சம்பளம்.. நாளையே கடைசி

image

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவிப் பயிற்சியாளர் பதவிக்கான 323 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு பயிற்சி அளிக்க கல்வித்தகுதி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் திறனறித் தேர்வு நடத்தப்படும். சம்பளமாக ₹1,12,400 வரை வழங்கப்படும். நாளைக்குள் (பிப்.15) இந்த <>லிங்கில்<<>> விண்ணப்பிக்கவும். SHARE.

error: Content is protected !!