News December 28, 2025
மாரடைப்பு ஆபத்தை தடுக்க இதை சாப்பிடுங்க (PHOTOS)

முன்பெல்லாம் மாரடைப்பு என்றால் வயதானவர்களுக்கு தான் வரும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய பரபரப்பான சூழலில் இளைஞர்களும் இதன் பிடியில் சிக்கி வருகின்றனர். முறையற்ற உணவு முறையே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உங்கள் இதயத் துடிப்பை வாழ்நாள் முழுவதும் சீராக வைத்திருக்க உதவும் சில முக்கியமான உணவுகள் எவை என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க. SHARE பண்ணுங்க.
Similar News
News January 6, 2026
மோடியை டிரம்ப் கடத்துவாரா?

வர்த்தகத்தை நிறுத்த வரியை ஓர் ஆயுதமாக டிரம்ப்
பயன்படுத்துவதாக காங்., மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார். இந்தியா மீது 50% வரிவிதித்துள்ளதால், இனி US உடன் வர்த்தகம் செய்ய முடியாது. அதனால், வேறு சந்தையை கண்டடைய வேண்டியுள்ளது. இதை வைத்து பார்த்தால் வெனிசுலாவில் நடந்தது போன்று இந்தியாவில் நடக்குமா? டிரம்ப் நமது பிரதமரையும் கடத்திச் செல்வாரா? என கேள்வி எழுப்பினார்.
News January 6, 2026
‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி ரிலீஸாகுமா?

‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி ஜன.9-ல் ரிலீஸாகுமா என கேள்வி எழுந்துள்ளது. பட ரிலீஸுக்கு 3 நாள்களே உள்ள நிலையில், தற்போதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பட ரிலீஸை ஜன.10-ம் தேதிக்கு ஏன் தள்ளி வைக்கக் கூடாது என ஐகோர்ட் நீதிபதி பி.டி.ஆஷா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.
News January 6, 2026
எல்லையில் கட்டுமானங்களை மேம்படுத்தும் சீனா

லடாக்கில் உள்ள பங்காங் ஏரிக்கு அருகே சீனா பெரும் கட்டுமானங்களை மேற்கொண்டு வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதன்மூலம், சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் அதிகளவிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் துருப்புக்களை சீனாவால் நிலைநிறுத்த முடியும். இது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. முன்னதாக, திபெத் எல்லை பகுதியில் வான் தாக்குதல்களுக்கான கட்டுமானங்களை சீனா உருவாக்கியது.


