News December 28, 2025
கரூருக்கு பெருமை சேர்த்த வீராங்கனை!

51 வது ஜூனியர் பெண்கள் கபடி போட்டியில் தமிழக அணியில் விளையாடுவதற்காக கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாணவி ஷா.மதினா பேகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 6வது முறையாக தமிழக அணிக்காக விளையாட உள்ளார். இவருக்கு கல்லூரி முதல்வர் நடேசன் மற்றும் செயலாளர் கண்ணன் ஆகியோரும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறை சார்ந்த நிர்வாகிகளும் பாராட்டுக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
Similar News
News January 11, 2026
கரூர்: பொங்கல் பரிசு முக்கிய தகவல்!

கரூர் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 11, 2026
கரூர்: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

கரூரில் இன்று (ஜனவரி 11) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தெருவிலோ திடீரென மின்தடை ஏற்பட்டால், பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) பிரத்யேக நுகர்வோர் சேவை எண்ணான 94987-94987 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இதன் பின்னர் மின்சாரம் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 11, 2026
கரூர் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் https://parivahan.gov.in/ என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க


