News December 28, 2025

கரூர்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

image

கரூர் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)

Similar News

News January 15, 2026

கரூர்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்

News January 15, 2026

கரூரில் 1 கிலோ ரூ.3000-க்கு விற்பனை

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மல்லிகை மற்றும் முல்லை பூ கிலோ ரூ.3000-க்கும், ஜாதி மல்லி ரூ.1000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கலர் காட்டான் ரூ.900, அரளி ரூ.290 என மற்ற பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் பண்டிகை தேவைக்காகப் பொதுமக்கள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

News January 15, 2026

கரூர் மாவட்டத்தில் ஏழு பேர் அதிரடி கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை, லாலாபேட்டை, பாலவிடுதி, பசுபதிபாளையம், வாங்கல், வெங்கமேடு காவல் நிலைய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் மது விற்ற சத்யராஜ் (35), ரங்கராசு (39), மாணிக்கம் (52), பெரியக்காள் (66), கஜேந்திரன் (48), சுரேஷ் (40), செல்வி (50) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் 153 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!