News December 28, 2025
EPS-ன் செயலில் நம்பகத்தன்மை இல்லை: முத்தரசன்

எதிரணி வலுவிழந்திருப்பதால் திமுக கூட்டணி வலுவாக இல்லை, திமுக கூட்டணி வலுவாக இருப்பதால்தான் எதிரணி வலுவிழந்திருக்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார். அதிமுக எப்படி செயல்பட வேண்டும் என அமித்ஷா முடிவெடுப்பதாக கூறிய அவர், உள்கட்சி பிரச்னைகளால் அவர்களின் நாள்கள் வீணாக கழிந்துவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், அதிமுக பொ.செ.,வாக EPS-ன் சொல், செயலில் நம்பகத்தன்மையே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 13, 2026
பாஜகவின் இசைக்கு ஆடும் அதிமுக: மனோ தங்கராஜ்

பிரிந்து கிடக்கும் அதிமுக, உள்கட்சி பிரச்னைகளை சமாளிக்க பாஜகவின் இசைக்கு ஏற்ப ஆட்டம் போடுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் சாடியுள்ளார். குமரியில் பேசிய அவர், PM மோடி எத்தனை முறை TN வந்தாலும் அவர்களுக்கு(பாஜகவுக்கு) ஒன்றும் கிடைக்கப் போவதில்லை என்றார். மேலும், அண்ணாவின் உரிமை பிரச்னைக்கே(பராசக்தி பட வசனம் நீக்கம்) அதிமுக குரல் கொடுக்காமல் இருப்பது வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 13, 2026
ஒரே கதை.. ஒரே ஹீரோயின்.. 3 படங்கள்!

தெலுங்கில் ‘துளசி’(2007) படம் பெரிய ஹிட்டடித்தது. அதை ‘விஸ்வாசம்’(2019) என மாற்றி எடுக்க, மெகா ஹிட். இதை இன்னும் பட்டி டிங்கரிங் பார்த்து மீண்டும் தெலுங்கில் ‘மன சங்கர வரபிரசாத் காரு’(2026) என ரிலீஸ் செய்ய, மீண்டும் ஹிட். இதில் முக்கிய பாய்ண்ட், 3 படத்திலும் நயன்தாராதான் ஹீரோயின். அதைவிட பெரிய டிவிஸ்ட், ‘துளசி’ ஹீரோ வெங்கடேஷ், ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
News January 13, 2026
நான் வெறும் பவுலர் மட்டும் அல்ல: ஹர்சித் ராணா

NZ-க்கு எதிரான முதல் ODI வெற்றியில் ஹர்ஷித் ராணா (29 ரன்கள் + 2 விக்கெட்கள்) முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில், அணி நிர்வாகம் தன்னை ஒரு ஆல்ரவுண்டராக வளர்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அதனால் வலை பயிற்சியின் போது பேட்டிங்கிலும் அதிக கவனம் செலுத்துகிறேன் எனவும், பேட்டிங்கில் 8-வது விக்கெட்டில் இறங்கி தன்னால் 30-40 ரன்களை குவிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.


