News December 28, 2025
தீபத்துாண் விவகாரம் மக்கள் மனதில் எரிகிறது: நயினார்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் CM ஸ்டாலின் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தீபத்தூண் தடை மக்கள் மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளதாக கூறிய அவர், தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் அப்பகுதிப் பெண்கள் மிக உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டார். இந்த விவகாரம் மற்றும் அரசு ஊழியர்களின் போராட்டங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார்.
Similar News
News January 13, 2026
Zomato-ல் ₹655.. நேரில் சென்று வாங்கினால் வெறும் ₹320!

பெண் ஒருவர் Zomato-ல் ஆர்டர் செய்த உணவுகளுக்கு, ₹655 பில் வந்துள்ளது. Discount-களுக்கு பிறகு, அவர் ₹550 கட்டியுள்ளார். இதே உணவுகளை அதே ஹோட்டலில், நேரில் வாங்கும் போது, ₹320 மட்டுமே பில் வந்துள்ளது. 2 பில்லையும் பதிவிட்டு, Zomato-ல் அதிக விலை வைப்பதாக விமர்சித்துள்ளார். இது ஹோட்டல் நிர்ணயிக்கும் விலை என Zomato பதிலளித்தாலும், நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
News January 13, 2026
‘பராசக்தி’ படத்தை தடை செய்யுங்க: காங்., முழக்கம்

SK-வின் ‘பராசக்தி’ படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக இளைஞர் காங்., வலியுறுத்தியுள்ளது. இது முழுக்க திமுக சார்பு படம்; 1965-ல் கோவைக்கு வராத இந்திரா காந்தியை அங்கு வந்ததாகவும், அவர் கண் முன்னே ரயில் எரிப்பு போராட்டம் நடந்ததாகவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நடக்காத ஒன்றை இப்படத்தில் திணித்த படக்குழு மன்னிப்பு கேட்டு, அனைத்து காட்சிகளையும் உடனே நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது
News January 13, 2026
விஜய்க்கு மீண்டும் அதிர்ச்சி.. சுடச்சுட தகவல்

டெல்லியில் CBI விசாரணையை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டார் விஜய். புஸ்ஸி ஆனந்த், நிர்மல், ஆதவ்விடம் 3 நாள்கள் CBI விசாரணை நடைபெற்ற நிலையில், விஜய் கேட்டுக் கொண்டதால், ஒரு நாளோடு விசாரணை முடிந்தது. இந்நிலையில், ஜன.19-ல் ஆஜராகும்படி விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னைக்கு வந்ததும் வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் உடனடி ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.


