News December 28, 2025
திருவாரூர்: அரசு பள்ளி மாணவியருக்கு ஊக்கத்தொகை

திருவாரூர் மாவட்டம், கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், கல்வியின் இடைநிற்றலை குறைக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கு ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பு முதல், 5 வரை மாணவியருக்கு ரூ.500, 6 ஆம் வகுப்பு மாணவியருக்கு ரூ1000, இதற்கு பெற்றோர்கள் ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News January 19, 2026
திருவாரூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

திருவாரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 19, 2026
திருவாரூர்: பொதுமக்களுக்கான ஓவிய போட்டி அறிவிப்பு

அரசு சார்பில் திருக்குறள் வாரம் கொண்டாடுவதையொட்டி, பொதுமக்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் திருக்குறள் சார்ந்த ஓவியப் போட்டி நாளை (ஜன.20) திருவாரூர் கஸ்தூரிபா காந்தி மேல்நிலைப் பள்ளியில் காலை 10:30 மணி முதல் நடைபெற உள்ளது. மேலும் முதல் பரிசு 5000 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஆதார் அட்டை நகலுடன் நேரில் சென்று பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
News January 19, 2026
திருவாரூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

திருவாரூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை <


