News December 28, 2025
வாழப்பாடியில் வசமாக சிக்கிய ஆசிரியர்கள்!

வாழப்பாடி: பேளூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 பயின்ற 17 வயது மாணவிக்கு, அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஜெகதீசன் மற்றும் தினகரன் ஆகியோர் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இரு ஆசிரியர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 15, 2026
சேலம்: அரசு சேவைகள் இனி உங்கள் வாட்ஸ்அப்பில்!

சேலம் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News January 15, 2026
சேலம்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க
News January 15, 2026
சேலம் உத்தமசோழபுரம் அருகே தொழிலாளி பலி!

கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வெங்கடேசன் (40). இவர் உத்தமசோழபுரம் சூளைமேடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பியது. இதில் படுகாயமடைந்த வெங்கடேசன் உயிரிழந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


