News December 28, 2025

கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது!

image

சாமல்பட்டி அருகே நாகல்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும், ரத்தினவேலுவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதில் ஆத்திரமடைந்த ரத்தினவேல், வெங்கடேசனின் நிலத்தை ஒட்டியுள்ள ஊராட்சி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தார். இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News January 14, 2026

கிருஷ்ணகிரி: ரயில்வேயில் 312 காலியிடங்கள்! APPLY NOW

image

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளம்: Rs.44,900. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <>இந்த லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News January 14, 2026

கிருஷ்ணகிரி: நடந்து சென்ற டிரைவர் பலி!

image

சூளகிரி அடுத்த இம்மிடிநாயக்கனப்பள்ளியை சேர்ந்த டிரைவர் மாரப்பன் (35). இவர் ஓசூர் தோட்டகிரி அலசநத்தம் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 11-ந் தேதி இவர் கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டையனூர் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

News January 14, 2026

கிருஷ்ணகிரியில் தொழிலாளி துடிதுடித்து பலி!

image

ஓசூர் அடுத்த ஜூஜூவாடியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளி சீனிவாசன் (47). இவர் கடந்த 11-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பெங்களூரு-ஓசூர் சாலையில் சேற்று கொண்டிருந்தார். அப்போது ஜூஜூவாடி அருகே அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குளானது. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!